search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக போராட்டம்"

    சமூக ஆர்வலர்கள் கைதை கண்டித்தும், சிட்லப்பாக்கம் பேரூராட்சியை கண்டித்தும் இன்று தி.மு.க.வினர் சிட்லப்பாக்கம் பேரூராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
    தாம்பரம்:

    சிட்லப்பாக்கம் பேரூராட்சியில் மழைநீர் வடிகால் கால்வாய் பணி நடந்து வருகிறது. இதில் டெண்டர் விட்டதில் முறைகேடு நடைபெற்றதாக சமூக ஆர்வலர்கள் 15-க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டனர்.

    இது தொடர்பாக பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன் போலீசில் புகார் செய்தார். அதில் அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி இருந்தார்.

    இதையடுத்து சமூக ஆர்வலர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் சமூக ஆர்வலர்கள் கைதை கண்டித்தும், சிட்லப்பாக்கம் பேரூராட்சியை கண்டித்தும் இன்று தி.மு.க.வினர் சிட்லப்பாக்கம் பேரூராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    இதற்கு புனித தோமையார் மலை ஒன்றிய செயலாளர் ரவி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பேரூராட்சி நிர்வாகத்தையும், போலீசையும் கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் தேவேந்திரன், லோகநாதன், அமுதா குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
    சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மயிலை மாங்கொல்லையில் இன்று மாலை அ.தி.மு.க. அரசை கண்டித்து நடைபெறும் கண்டன பொதுக் கூட்டத்தில் கனிமொழி எம்.பி.பேசுகிறார். #DMK #Kanimozhi
    சென்னை:

    சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மயிலை மாங்கொல்லையில் இன்று மாலை அ.தி.மு.க. அரசை கண்டித்து கண்டன பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.

    அனைத்து துறைகளிலும் நடைபெறும் ஊழலை கண்டித்து நடத்தப்படும் இந்த பொதுக் கூட்டத்துக்கு பகுதிச் செயலாளர் த.வேலு தலைமை தாங்குகிறார். இதில் தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றுகிறார்கள்.

    கூட்டத்தில் கு.க.செல்வம், எம்.கே.மோகன், குமரி விஜயகுமார், எம்.டி.ஆர். நாதன், துரை, வெல்டிங் மணி, ஐ.கென்னடி, செல்வி சவுந்தரராஜன், ராணி ரவிச்சந்திரன், கிருஷ்ணமூர்த்தி, அன்பு கபாலி, ரேவதி, மலர், டில்லிராணி உள்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

    இதே போல் வருகிற 1-ந்தேதி (திங்கள்) மாலை 6 மணிக்கு தி.நகர் பஸ் நிலையம் அருகே முத்துரங்கன் சாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் லியோனி, ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றுகின்றனர். பகுதிச் செயலாளர்கள் ஜெ.கருணாநிதி, கே.ஏழுமலை, வட்டச் செயலாளர் உதயசூரியன், ஜானகிராமன், அசோக்நகர் சுப்பையா, லலிதாபுரம் துரை மற்றும் ஏராளமானோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர். #DMK #Kanimozhi
    நாகர்கோவில் அண்ணா பஸ்நிலையம் அருகே அவதூறாக பேசிய சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் முன்பு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு மற்றும் கூட்டணி கட்சிகள் பங்கேற்ற மறியல் போராட்டம் நடந்தது.

    போராட்டத்தில் பங்கேற்க கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன், நகர செயலாளர் வக்கீல் மகேஷ் முன்னாள் எம்.எல்.ஏ. பெர்னார்டு மற்றும் நிர்வாகிகள் பசலியான், ஷேக்தாவூது, உதயகுமார் உள்பட பலர் திரண்டு வந்தனர். அவர்களுடன் வந்த தொண்டர்கள் சிலர் போராட்டம் நடைபெறும் பகுதியில் திறந்திருந்த கடைகளை அடைக்கும்படி கூறினர். அவர்களை பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அந்த நேரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பாதுகாப்பு பணிக்கு வந்தார். அவர் தி.மு.க.வினரை நோக்கி சில வார்த்தைகளை பேசினார். அவரது பேச்சுக்கு தி.மு.க.வினர் கண்டனம் தெரிவித்தனர்.

    தி.மு.க.வினரை சப்-இன்ஸ்பெக்டர் தரக்குறைவாக பேசியதாக சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ.விடம் தொண்டர்கள் புகார் கூறினர். சப்-இன்ஸ்பெக்டர் தன் பேச்சுக்கு உடனடியாக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கூறிய சுரேஷ்ராஜன், அவர் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் நடத்துவோம் என்றபடி அண்ணா பஸ் நிலையம் அருகில் உள்ள செம்மாங்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டார்.

    சுரேஷ்ராஜனுடன் ஏராளமான தி.மு.க.வினரும் சாலையில் அமர்ந்து சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர். இதனால் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.

    உடனே டி.எஸ்.பி. இளங்கோவன் மறியலில் ஈடுபட்ட சுரேஷ்ராஜனை சமரசம் செய்ய முயன்றார். அதற்கு அவர் சப்-இன்ஸ்பெக்டர் மன்னிப்பு கேட்க வேண்டும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அதுவரை போராட்டத்தை கைவிட மாட்டோம், இது பற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரில் வந்து உறுதி அளிக்க வேண்டும் என்று கூறினார்.மேலும் அவர் நடுரோட்டில் படுத்தபடி கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷங்களும் எழுப்பினார். தி.மு.க.வினரின் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    இந்த தகவல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அவர் அண்ணா பஸ் நிலையம் வந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த டி.எஸ்.பி. இளங்கோவனிடம் நடந்த சம்பவம் பற்றி கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் சுரேஷ் ராஜனை சந்தித்து இப்பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணப்படும், சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே போராட்டத்தை கைவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

    எஸ்.பி. ஸ்ரீநாத்தின் உறுதி மொழியை ஏற்று சுரேஷ் ராஜனும், தி.மு.க.வினரும் போராட்டத்தை கைவிட்டனர். அதன் பிறகு சுரேஷ் ராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க.வினரை போலீசார் வேண்டும் என்றே அவதூறாக பேசி வருகிறார்கள். தி.மு.க.வினர் மக்கள் பிரச்சனைக்காக மட்டுமே போராடுகிறார்கள். போராடும் அவர்களை போலீசார் இழிவாக பேசுகிறார்கள். இதை நாங்கள் ஏற்க மாட்டோம்.

    இந்த பிரச்சனையை தமிழகம் தழுவிய பிரச்சனையாக கொண்டுச் சென்று போராட்டம் நடத்துவோம். இன்று மாவட்ட எஸ்.பி. எங்களிடம் அளித்த உறுதி மொழிப்படி சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் நாளை முதல் நாங்கள் போராட்டத்தில் குதிப்போம்.

    என்ன போராட்டம் நடத்துவது என்பது பற்றி அனைத்து கட்சி நிர்வாகிகளையும் அழைத்துப் பேசி முடிவு செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நாகர்கோவிலில் தி.மு.க. போராட்டத்திற்கு மட்டுமே அனுமதி மறுக்கப்படுகிறது என்று ஆர்ப்பாட்டத்தில் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ பேசினார். #propertytaxhike
    நாகர்கோவில்:

    சொத்து வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும், வரி உயர்வை திரும்ப பெற கோரியும் இன்று தி.மு.க.வினர் கண்டன போராட்டம் நடத்தினர். நாகர்கோவில் நகராட்சி முன்பு குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட் டம் நடந்தது. இதற்கு கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான சுரேஷ் ராஜன் தலைமை தாங்கினார். ஆஸ்டின் எம்.எல்.ஏ., பெர்னார்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். இதற்காகவே தி.மு.க. போராட்டம் நடத்துகிறது. குமரி மாவட்ட தி.மு.க. சார்பில் இங்கு போராட்டம் நடத்த போலீசாரிடம் முன்கூட்டியே அனுமதி கேட்டோம். அவர்கள் நேற்று அனுமதி மறுப்பதாக தெரிவித்தனர்.

    குமரி மாவட்டத்தில் பாரதீய ஜனதா கட்சி பைக் பேரணி நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. ஆளும் கட்சியினர் சாலை எங்கும் பேனர்கள் வைக்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் தி.மு.க.வினரின் போராட்டத்திற்கு மட்டும் அனுமதி மறுக்கப்படுகிறது. நாங்கள் இனி அனுமதி கேட்காமலேயே போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவில்லை. தேர்தல் நடத்தப்படுமானால் தி.மு.க. வெற்றிபெறும். அடுத்து தமிழகத்தில் தி.மு.க. தான் ஆட்சிக்கு வரும். மு.க.ஸ்டாலின் முதல்- அமைச்சர் ஆவார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆஸ்டின் எம்.எல்.ஏ. பேசியதாவது:- ஆளும் அ.தி.மு.க. ஆட்சியில் முட்டை கொள்முதலில் தொடங்கி பல்வேறு திட்டங்களிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. அ.தி.மு.க. அரசு மத்திய அரசின் அடிமையாகவே செயல்படுகிறது. உள்ளாட்சி தேர்தல் நடந்திருந்தால் மத்திய அரசின் ரூ.3,500 கோடி நிதி கிடைத்திருக்கும். இப்போது அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் கேட்சன், கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவு செயலாளர் தில்லை செல்வம், ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், தாமரைபாரதி, சற்குரு கண்ணன், அணி அமைப் பாளர்கள் ஆர்.எஸ்.பார்த்த சாரதி, சிவராஜ், சதாசிவம், எம்.ஜே.ராஜன், பாலஜனாதி பதி, சி.என்.செல்வன், ஷேக் தாவூது, செயற்குழு உறுப்பினர் சாய்ராம், சைமன் ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். அவர்கள் சொத்து வரி உயர்வை ரத்து செய்ய கேட்டு கோஷங்கள் எழுப்பினர். #propertytaxhike
    சென்னை-சேலம் எட்டு வழி பசுமை விரைவுச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு எதிராக திருவண்ணாமலையில் 25-ம் தேதி திமுக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்துள்ளனர்.#ChennaiSalemGreenExpressWay
    சென்னை:

    தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    “சென்னை-சேலம் எட்டு வழி பசுமை விரைவுச்சாலை” அமைக்கும் திட்டத்தை காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயிகளும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் மிகக்கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.

    இந்த பசுமை விரைவு சாலை திட்டத்தால் மிக மோசமாக பாதிக்கப்படும் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையிலும், விளை நிலங்கள், பசுமையான மலைகள், நீர் ஆதாரங்கள் போன்றவற்றிற்கு ஏற்படும் கடும் பாதிப்பை தடுத்து நிறுத்தும் வகையிலும் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட கழகத்தின் சார்பில் இன்றைய தினம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறார்கள்.

    ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்டத்தின் சார்பில் திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் எ.வ.வேலு, எம்.எல்.ஏ., தலைமையில், திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் சிவானாந்தம் முன்னிலையில் வருகின்ற 25-ந் தேதி “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ChennaiSalemGreenExpressWay
    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கனிமொழி, திருமாவளவன் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர். #SterliteProtest #DMKBandh
    சென்னை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள்.

    இதற்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக கோரியும், டி.ஜி.பி. ராஜேந்திரனை பதவி நீக்கம் செய்ய கோரியும், தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகள் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று மறியல் போராட்டம் நடைபெற்றது.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள மதுராந்தகம் சென்றிருந்தார். அங்கு திருமணத்தை நடத்தி வைத்த பின் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

    அவருடன் புதுமண தம்பதியும், கட்சி தொண்டர்களும் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை எழும்பூரில் தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, எம்.எல்.ஏ.க்கள் பி.கே.சேகர்பாபு, ப.ரங்கநாதன், கே.எஸ்.ரவிச்சந்திரன், தாயகம் கவி மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.


    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் அ.தி.மு.க. அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர். எடப்பாடி பழனிசாமி அரசு உடனே பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினார்கள். மறியலிலும் ஈடுபட்டனர். உடனே கனிமொழி- திருமாவளவன் உள்பட எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

    தியாகராயநகர் பஸ் நிலையம் அருகே மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் கண்டன முழக்கமிட்டனர்.

    இதில் அண்ணாநகர் மோகன், கு.க.செல்வம், பகுதி செயலாளர்கள் ஜெ.கருணாநிதி, கே.ஏழுமலை, அகஸ்டின்பாபு உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

    சைதாப்பேட்டையில் மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்- மறியல் நடைபெற்றது.

    இதில் தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன், தி.மு.க. பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சைதை குணசேகரன், மகேஷ்குமார் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகளும் கூட்டணி கட்சியினரும் பங்கேற்றனர்.

    குன்றத்தூரில் மாவட்டச்செயலாளர் தா.மோ. அன்பரசன் எம்.எல்.ஏ. தலைமையில் பஸ் நிலையம் அருகே மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் பட்டூர் ஜபருல்லா, சத்தியமூர்த்தி உள்பட ஏராளமானோர் மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

    குரோம்பேட்டை பஸ் நிலையத்தில் பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி தலைமையில் மறியல் பேராட்டம் நடைபெற்றது.

    இதில் காங்கிரஸ் கட்சி பிரமுகர் தீனதயாளன், ம.தி.மு.க. சார்பில் ரஜினி மற்றும் ஜோசப் அண்ணா துரை, ரமேஷ் உள்பட ஏராளமானோர் மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

    இதே போல் நகரின் பல பகுதிகளில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் மறியலில் ஈடுபட்டு கைதானார்கள். #SterliteProtest #DMKBandh
    ×